தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல்

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக, தன்மீது தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
x
நடிகர் விவேக் சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்ற நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்து சில கருத்துகளை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  அவரது கருத்து அரசின் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு எதிராக இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மன்சூர் அலிகான் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் தொடர்ந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறும், முன் ஜாமீன் வழங்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், உள்நோக்கத்துடன் தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை என்றும், தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்