"மே2-ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்" - தலைமை தேர்தல் அதிகாரி திட்டவட்டம்
பதிவு : ஏப்ரல் 23, 2021, 05:03 PM
தமிழகத்தில் மே 2-ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சந்தித்த சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளோடு பல சுற்று ஆலோசனைகள் நடத்தி இருப்பதாகவும், தமிழக தலைமை செயலாளருடன் தான் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் மே.2-ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என உறுதியளித்த சத்யபிரதா சாகு, அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஊரடங்கு ரத்து குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் எனவும் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கையின் போது, தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கும் என்றும், மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கான வாக்கு எண்ணும் பணி 8.30 மணிக்கு தொடங்கும் என தெரிவித்துள்ளார். 

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து ஓரிரு நாட்களில் விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். 

பிற செய்திகள்

அரசு ஊழியர்கள் தடுப்பூசி எடுக்க உத்தரவு - அஸ்ஸாம் அரசு

அசாமில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வழக்கமான நேரத்தில் இயங்கலாம் என அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது.

3 views

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

21 views

பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் மதன் - ஜூலை 3ஆம் தேதி வரை அடைக்க உத்தரவு

பப்ஜி மதனை ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர், பூந்தமல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

18 views

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

கேரளாவில் புத்தக வாசிப்பு திருவிழா - முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார்

27 views

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை - வழிகாட்டுதலை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

11 views

3ஆம் நபர் பெயரில், போலியாக சொத்துப் பதிவு விவகாரம்

தனது சொத்து, வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யவும் மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.