"தமிழகத்திற்கு 20 லட்சம் டோஸ்கள் தேவை" - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
x
முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு சுமார் 20 லட்சம் டோஸ்கள் தேவைப்படுகிறது என்றும், தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படாத வண்ணம், 2-வது தவணைக்காக வரும் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய தமிழகத்திற்கு தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சில மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை தங்கள் மாநிலங்களுக்குள் மட்டும் விற்பனை செய்ய நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கவனத்திற்கு வந்துள்ளதாக கூறியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநிலங்களின் இந்நடவடிக்கைகள் மருந்தின் தேவை இருக்கும் இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியிருக்கிறார். மேலும், மாநிலங்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தலையிட்டு, ரெம்டெசிவர் மருந்துகள் கிடைப்பதற்கு மத்திய அரசு வழி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு ஆவண செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்