காட்டு யானைகளை விரட்டும் பணி: "கும்கி யானைக்கு மதம் பிடித்தது" - பாகனை ஆக்ரோஷமாக விரட்டியதால் பரபரப்பு

காட்டு யானையை விரட்ட வந்த கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்து, சக கும்கி யானைகள் மற்றும் பாகனை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானைகளை விரட்டும் பணி: கும்கி யானைக்கு மதம் பிடித்தது - பாகனை ஆக்ரோஷமாக விரட்டியதால் பரபரப்பு
x
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா பகுதியில் வீடு, கடைகளை சேதப்படுத்திய வரும் இரண்டு காட்டு யானைகளை விரட்ட முதுமலையில் இருந்து 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டும் பணி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் யானை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கும்கி யானை வில்சனுக்கு திடீரென மதம் பிடித்தது. இதையடுத்து சக கும்கி யானைகளையும், பாகனையும் மதம் பிடித்த யானை ஆக்ரோஷமாக துரத்தியது. இதில் யானைப்பாகன்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  கடும் முயற்சிக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட யானை வில்சன் தொடர்ந்து ஆக்ரோசமாக காணப்படுகிறது. யானை வில்சனை நாளை லாரியில் ஏற்றி முதுமலை கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்