அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி, இன்று முதல் வருகின்ற 26 ஆம் தேதி வரை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, 

தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஐந்து நாட்களும்  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்