ஆக்சிஜன் விவகாரம்- உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு

ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்தை பிற மாநிலங்களுக்கு அனுப்பிய விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
x
ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்தை பிற மாநிலங்களுக்கு அனுப்பிய விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து அனுப்பப்படுவதாக தகவல் வெளியானது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் விளக்கத்தை கேட்டு தெரிவிக்குமாறு தமிழக தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை தமிழகத்துக்கு வந்து விடக் கூடாது எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்