பொறியியல் தேர்வு முறையில் மாற்றம் - அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் செமஸ்டர் தேர்வு முறைகளில் மாற்றம் செய்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது.
x
பொறியியல் செமஸ்டர் தேர்வு முறைகளில் மாற்றம் செய்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி அளித்துள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.

அதன்படி, தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி  வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கேள்விகளுக்கு மாணவர்கள் நேரடியாக புத்தகத்தை பார்த்து விடை எழுதுவதுபோல் இல்லாமல், நன்கு புரிந்துக்கொண்டு விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்படும்.

அவ்வாறு தேர்வு எழுதும்போது மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் புத்தகத்தில் ஆய்வு செய்து, புரிந்துக்கொண்டு விடை எழுதலாம் எனவும், இணையதளத்தையும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், குறிப்பிட்ட நேரத்திற்குள் இணையதளத்தில் தோன்றும் கேள்விகளை பார்த்து பேப்பரில் விடைகளை எழுதவேண்டும் எனவும், பின்னர் அதனை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த செமஸ்டர் தேர்வு நேரடியாக ஆன்லைனில் நடைப்பெற்ற நிலையில், இம்முறை வீட்டில் இருந்தே எழுதி விடைத்தாளை இணையத்தில் பதிவேற்றும் முறை கொண்டு வரப்பட்டிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்