ஏ.டி.எம் அட்டை மூலம் ரூ. 1 லட்சம் கொள்ளை - பிறந்ததேதியை வைத்து பணமெடுத்த நபர்
பதிவு : ஏப்ரல் 19, 2021, 09:13 AM
டிஜிட்டல் திருட்டு குறித்து மக்களிடம் எத்தகைய விழிப்புணர்வை விதைத்தாலும், தவிர்க்க முடியாமல் சில குற்றச்செயல்களுக்கு நமது அறியாமை காரணமாகி விடுகிறது.
டிஜிட்டல் திருட்டு குறித்து மக்களிடம் எத்தகைய விழிப்புணர்வை விதைத்தாலும், தவிர்க்க முடியாமல் சில குற்றச்செயல்களுக்கு நமது அறியாமை காரணமாகி விடுகிறது. அப்படி தான் இங்கும் எ.டி.எம் அட்டைக்கு பிறந்த தேதியை பின் நம்பராக வைத்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை அடையாறில், ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தனது இருசக்கர வாகனத்தின் பின்புறம் ஏ.டி.எம் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துவிட்டு அவசரத்தில் சரியாக மூடாமல் சென்றுவிட்டார். 

பின்னர் பணியில் இருந்த அவருக்கு தனது வங்கி கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வீதம், 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டதாக தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், அதர்ச்சியடைந்த அவர், வாகனத்தில் பார்த்தபோது தான் தனது ஏ.டி.எம் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதை அந்த பெண் அறிந்தார். உடனே அந்த பெண் இதுகுறித்து  அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பெண்ணின் ஏ.டி.எம் அட்டையை வைத்து பணம் எடுக்கப்பட்ட, ஏ.டி.எம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், பணத்தை கொள்ளையடித்தது குரோம்பேட்டை நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய முகமது இம்ரான் என்பது தெரியவந்தது.

இதன்பிறகு தான் ஏ.டி.எம் அட்டையின் ரகசிய பின் நம்பரை எப்படி கண்டுபிடித்தார் என்ற கோணத்தில், இம்ரானிடம்  காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் பணத்தை தவறவிட்ட பெண்ணின் இரண்டு கவனக்குறைவான விஷயங்களே சிக்கலுக்கு மூல காரணமாக அமைந்திருக்கின்றன. முதல் தவறு ஏ.எடி.எம் அட்டையின் பின் நம்பராக அவரது பிறந்த தேதியை வைத்தது. இரண்டாவது, பிறந்த தேதியை காண்பிக்கும் ஓட்டுநர் உரிமைத்தையும் ஏ.டி.எம் அட்டையோடு வைத்தது.

இரண்டையும் திருடிசென்ற இம்ரான், முதலில் ஏதேதோ எண்களை வைத்து முயற்சி செய்திருக்கிறார். பிறகு திடீரென உதித்த யோசனையின் மூலம் ஓட்டுநர் உரிமத்தில் இருந்த பிறந்த தேதியை பின் நம்பராக பதிவிட்டு முயற்சித்திருக்கிறார். அவ்வளவு தான், முகமது இம்ரானுக்கு அடித்தது அதிர்ஷ்டம்....

என்னதான் சாதூரியமாக கொள்ளையடித்தாலும் முகமது இம்ரானின் அதிர்ஷ்டம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினரிடம் பிடிப்பட்டு இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் அவர். டிஜிட்டல் பணபரிவர்த்தைனைகளில் கூடுதல் கவனம் தேவை என்பதற்கு  இந்த சம்பவம் மற்றொரு பாடம்....

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6526 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1143 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

232 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

88 views

பிற செய்திகள்

மீனவர்களுடன் படகு மூழ்கியதில் 4 தமிழக மீனவர்கள் மாயம்

தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உள்பட 8 மீனவர்களுடன் மீன்பிடி படகு கடலில் மூழ்கியது.

8 views

சூறைக்காற்றுடன் மழை... மரங்கள் விழுந்ததில் 12 வீடுகள் சேதம்

பொள்ளாச்சி அருகே சூறைக்காற்றால் மரங்கள் சரிந்து விழுந்து 12 வீடுகள் சேதமடைந்தன.

28 views

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு | Aavin

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் காலை முதல் விற்பனையாக உள்ளன.

17 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - திரையுலகினர் நிதியுதவி | COVID19

தமிழக அரசின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திரையுலகினர் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

21 views

தமிழகத்தில் புதிதாக 33,658 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்துள்ளது

15 views

முதல்வரை நேரில் சந்தித்து ஜி.கே.வாசன் ரூ.10 லட்சம் நிதி உதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.