"20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும்" - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக அரசால் கேட்கப்பட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
x
பிரதமருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கைமீறிப் போய்விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞரே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு சூழல் உள்ளது என்றும், தமிழகத்தில் வெறும் 46.70 லட்சம் பேர்களுக்குத்தான் இதுநாள் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், தடுப்பூசி பற்றாக்குறையால் தவிக்கும் தமிழகம், மத்திய அரசின் வழிமுறைகளின்படி தேவைப்படும் நபர்களுக்குகூட தடுப்பூசியை செலுத்த முடியாமல் திணறி வருகிறது எனக் கூறியிருக்கும் அவர், தாங்கள் உடனடியாகத் தலையிட்டு மாநில அரசால் கேட்கப்பட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக அனுப்ப வேண்டும் எனக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை அதிக அளவு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்