டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
x
டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பாதிக்கப்படுபவர்களுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சேலம் மாவட்டம், கருமலைக்கூடலில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை எதிர்த்து, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பலர்  போராட்டம் நடத்தினர். அப்போது கடையின் மீது கல்வீசி தாக்கியதாக 10 பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதை ரத்து செய்ய கோரி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  வருமானத்தை பெருக்க டாஸ்மாக் கடைகளை அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்று கூறினார். ஆனாலும் டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமையுண்டு என கூறி, மனுதாரர் உட்பட 10 பெண்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து  உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்