வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு? - சத்யபிரதா சாகுவிடம் திமுகவினர் புகார்
பதிவு : ஏப்ரல் 16, 2021, 06:45 PM
தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யகோரி, தமிழக தேர்தல் ஆணையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில் திமுகவைச் சேர்ந்த பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பொன்முடி, கடந்த 6 நாட்களாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் பல்வேறு பிரச்னைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் கழிப்பறை எடுத்துச் செல்வதாக கூறி சிலர் சென்று வருவதாகவும் புகார் தெரிவித்தார். 

ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் அமைச்சர்கள் போட்டியிடக்கூடிய இடங்களில் உள்ள மையங்களில் இரவு நேரங்களில் சில நபர்கள் சென்று வருவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஒய் பை (WiFi) வசதி இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொன்முடி கேட்டுக்கொண்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.