மதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
பதிவு : ஏப்ரல் 16, 2021, 05:14 PM
மதுரை சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் திருக்கல்யாணத்தை காண பக்தர்களை கட்டுப்பாட்டுடன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும்... சாமி வீதி உலாவை சித்திரை வீதியில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், சிவகங்கையை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சிவஞானம்,  மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே விழாவை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், கொரோனா வைரஸ் 2 ஆவது அலை பரவுவதை தடுக்க பொது நலன் கருதியே அரசு கோவில் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவித்தனர். விழாவை காண மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் நாள் தோறும் விழா முடிந்தவுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். மேலும், சித்திரை திருவிழாவின் போது, சிறப்பு பாஸ், விஐபி  பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்க வேண்டாம்
எனவும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டன்ர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், சித்திரை திருவிழாவின் போது பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6421 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1037 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

176 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

51 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

33 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

33 views

பிற செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை - முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

தமிழகத்தில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

6 views

ஸ்ரீரங்கம் ஜீயர் நியமன விவகாரம் அறிவிப்பு ரத்து - கோயில் இணை ஆணையர் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் ஜீயர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவித்துள்ளார்.

80 views

இன்று உலக செவிலியர் தினம்; மன அழுத்தத்திற்கு ஆளான செவிலியர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்

உலக செவிலியர் தினத்தையொட்டி, சென்னையில் கொரோனோ பணியால் மன அழுத்ததிற்கு ஆளான செவிலியர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்

121 views

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு.. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்துரை

16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி பதவி ஏற்றனர்.

82 views

வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும்; குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்- அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை

வரும் நாட்களில் கொரோனா பாதிப்பை விட, குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

79 views

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்

ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நெல்லை சிவா நெல்லை தமிழில் பேசி பிரபலமானவர்

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.