பெண் காவலரை கற்பழிக்க முயன்ற சக காவலர் - கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலரை பலாத்காரம் செய்ய முயன்றதாக சக காவலரே கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
தஞ்சை பாபநாசத்தில் உள்ள அய்யம்பேட்டை காவல் நிலையத்தில், ஆயுதப் படையைச் சேர்ந்த பெண் போலீஸ் கடந்த 4 நாட்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் பணி முடிந்து வழக்கம்போல் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் மாடியில் உள்ள பெண் காவலர்களுக்கான ஓய்வு அறையில் தங்கியுள்ளார். அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் திருவையாறு அம்மன் பேட்டையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், அந்தப் பெண் போலீசை தொலைபேசியில் வரவழைத்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.  உடனே அந்தப் பெண் போலீஸ் பதறி கூச்சலிட்டு அறைக்குள்ளே ஓடியுள்ளார். இது குறித்து பெண் காவலர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், முருகானந்தத்தின் மீது பலாத்காரத்திற்கு முயன்றதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முருகானந்தத்தை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். தற்போது குற்றம் சாட்டப்பட்ட முருகானந்தம் பாபநாசம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் நிலையத்தினுள்ளேயே நிகழ்ந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

"பெண் காவலரை பலாத்காரம் செய்ய முயற்சி" - சக காவலர் மீது குற்றச்சாட்டு

அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலரைப் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட காவலர் முருகானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சஞ்சய் சேகர் உத்தரவிட்டுள்ளார்.  காவலர் முருகானந்தத்தை குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்