ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்ய அனுமதி

இந்தியன்-2 பட இயக்குநர் ஷங்கர், படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்குவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், மேல் முறையீடு செய்ய லைகா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது
x
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் - 2 திரைப்படத்தை  இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல், வேறு படங்களை இயக்க, இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனிடையே, இயக்குனர் சங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாதென வழக்கை தனி நீதிபதி ஒத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக, அந்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகலை தாக்கல் செய்வதில் இருந்து விலக்களிக்க கோரி லைகா நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்