நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் : "அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம்" - கொள்முதல் நிலைய பணியாளர்கள் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாயின.
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் : அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் - கொள்முதல் நிலைய பணியாளர்கள் குற்றச்சாட்டு
x
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் திருவையாறு, பூதலூரில் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை, அரவைக்கோ, சேமிப்பு கிடங்குக்கோ அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் வார கணக்கில் 12 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவை, மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகின்றன. இதனிடையே, தரக்கட்டுப்பாடு மேலாளரின் அலட்சியத்தால் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக, பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்