தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு குறைப்பு : "ஒட்டுமொத்த தேவையில் 20% மட்டுமே ஒதுக்கீடு" - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை 20 சதவீதமாக குறைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு குறைப்பு : ஒட்டுமொத்த தேவையில் 20% மட்டுமே ஒதுக்கீடு - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி
x
தமிழகத்தில் கிராமப்புற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு தேவையான மண்ணெண்ணெய் அளவில் 20% மட்டுமே மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்