பள்ளிக்கல்வி துறை மீது புதிய புகார்

பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை கடைசி நேரத்தில் அவசர அவசரமாக செலவழித்து, மாணவர்களுக்கு தரமில்லாத பொருட்களை வழங்கி வருவதாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை கடைசி நேரத்தில் அவசர அவசரமாக செலவழித்து, மாணவர்களுக்கு தரமில்லாத பொருட்களை வழங்கி வருவதாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில், இளைஞர் மன்றம், சுற்றுச்சூழல் மன்றத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து ,சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அது தொடர்பான போட்டிகளை நடத்தி பரிசு பொருட்களை வழங்கவும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

அதன்படி, தொடக்கப் பள்ளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்காக, உள்ளூரிலேயே கொள்முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள், தரமில்லாதவை என்றும் காலாவதியானவை என்றும் உடற்கல்வி ஆசிரியர் சங்க தலைவர் தேவி செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எழுத்துப்பூர்வ புகாரை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனரிடம் தேவி செல்வம் அளித்திருக்கிறார்.மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு டேப்லெட், ஸ்மார்ட்போன், கால்குலேட்டர் போன்றவை பரிசுப் பொருட்களாக வழங்கப்படுகின்றன. இதேபோல, கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கிருமிநாசினி, கையுறைகள், முகக் கவசம் ஆகியவையும் பள்ளிகளில் வாங்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட இந்த திட்டங்களில் மிகப்பெரும் முறைகேடுகள் நடப்பதாகவும், முறையான விசாரணை நடத்துவதற்கு அரசு உத்தரவிட வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.






Next Story

மேலும் செய்திகள்