"12ஆம் வகுப்புக்கு மட்டும் தான் பள்ளி" உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

அரசு உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
x
கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தவிர்த்து பிற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் அரசு பள்ளிகளில் மத்திய அரசு நிதி உதவியை பயன்படுத்தி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சில பள்ளிகள் 9,10 உள்ளிட்ட சில வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், எக்காரணம் கொண்டும் பன்னிரண்டாம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக் கூடாது என தெரிவித்தார். இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்