முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை
பதிவு : ஏப்ரல் 11, 2021, 04:26 PM
திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்....
சென்னை கோயம்பேடு பகுதியில் சாலையோரம் வசித்து வந்தவர் சாந்தி. 46 வயதான இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். திருமணமான இவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன், மனைவி போல வசித்து வந்ததாக தெரிகிறது. 
ஆனால் கோயம்பேட்டில் கூலி வேலை பார்த்து வந்த 48 வயதான முத்து என்பவருடன் 3வதாக சாந்திக்கு பழக்கம் ஏற்படவே அது ஒரு கட்டத்தில் தகாத உறவாக தொடர்ந்துள்ளது. முத்துவுடன் நெருங்கிப் பழகி வந்த சாந்தி திடீரென தன் 2வது கணவருடனும் உறவை தொடரவே, ஆத்திரமடைந்துள்ளார் முத்து. 
இதனை பலமுறை முத்து கண்டித்து வந்ததாகவும் தெரிகிறது. ஆனால் சாந்தி அதனை பொருட்படுத்தாததால் இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினையும் இருந்துள்ளது. இதனால் முத்துவை விட்டு விலகி இருக்கிறார் சாந்தி. காதலி தன்னை விட்டு பிரிந்த ஆத்திரத்தில் இருந்த முத்து சம்பவத்தன்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சாந்தியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் விளிம்பிற்கு சென்ற முத்து தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சாந்தியின் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் சாந்தியை கட்டி அணைத்ததில் முத்துவுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் 2 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 2 பேரும் பலியாகினர். இவர்களின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6574 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1187 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

256 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

69 views

பிற செய்திகள்

கீழமை நீதிமன்றங்களின் பணிகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்துங்கள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

63 views

பாரத் பயோடெக் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க கோரி முத்தரசன் கோரிக்கை

கொரோனா தடுப்பு பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

48 views

மாயமான நாகை மீனவர்களை மீட்க வேண்டும் - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

மாயமான நாகை மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

40 views

தமிழகத்தில் 14 லட்சம் தடுப்பூசி இருப்பு - மத்திய அரசு தகவல்

தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 86 லட்சம் தடுப்பூசிகளில் தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

33 views

முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் ரஜினி சந்திப்பு; கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.50 லட்சம் நிதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

69 views

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு. இந்த புறக்கணிப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.

319 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.