உரிய ஒப்புதல்கள் இல்லாத தண்ணீர் லாரிகள் இயங்க முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகள் இயங்க அனுமதிக்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
x
இது தொடர்பாக தென் சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  பொதுமக்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்லும் போது, ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்வதாக கூறி அதிகாரிகள், தண்ணீர் லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். இதற்கு  தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தண்ணீர் எடுக்கவும், கொண்டு செல்லவும் உரிய ஒப்புதல்களை பெற்ற லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை என அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 
உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகள் இயங்க அனுமதிக்க முடியாது என கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்