கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு - மறு உத்தரவு வரும் வரையில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
கொரோனா புதிய  கட்டுப்பாடுகள் அறிவிப்பு - மறு உத்தரவு வரும் வரையில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு
x
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவு விடுதிகளில் பணியாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்தல், முகக்கவசம் அணிதல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது என்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துதலை தொழிற்சாலை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்கள் இடையேயும், சென்னையிலும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பயணிகள் இருக்கையில் இருந்து பயணிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் நின்று கொண்டு பயணிக்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடக செல்லும் பேருந்துகளிலும் இருக்கையில் இருந்து செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் நின்று கொண்டு பயணிக்க அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது. வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களை தொடந்து கண்காணிக்க  இ- பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி தொடரும் என்றும் கலைஞர்கள், பணியாளர்கள்  கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வதையும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தமிழக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்