"அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த நான்கு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த நான்கு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை முதல் 12-ஆம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இலங்கையை ஒட்டிய கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்ககூடும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு எதுவுமில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறி உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்