அண்ணா பல்கலை. முறைகேடு புகார் : "ஒரு சில நாட்களில் சூரப்பாவுக்கு நோட்டீஸ்" - நீதிபதி கலையரசன் குழு
பதிவு : ஏப்ரல் 07, 2021, 02:16 PM
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் பதவி காலம் வரும் 11 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஒரு சில நாட்களில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என விசாரணை குழு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த‌து. இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவினர் 4 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை துணைவேந்தரை தவிர்த்து மற்ற அனைவரிடமும் நேரில் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சூரப்பாவின் பதவிகாலம் வரும் 11 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதற்கு முன்னதாகவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. நோட்டீசுக்கு சூரப்பா அளிக்கும் பதிலைப் பொறுத்து, அவரை நேரில் அழைத்து விசாரணை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என விசாரணை குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

9 views

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - தமிழக அரசு

தமிழகத்தில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவிர் ஆகியவற்றில் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

31 views

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - தற்செயலாக நடந்த பேட்டி என ரஜினிகாந்த் பதில்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பியுள்ளார்.

494 views

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் மனு

தபால் வாக்குகள் எண்ணுவதற்கான நடைமுறையை வாக்கு எண்ணும் நாளான மே 2 ஆம் தேதிதான் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

83 views

கீழடியில் 7ம் கட்ட அகழாய்வுப் பணி - 2600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு

கீழடியில், 7ம் கட்ட அகழாய்வுப் பணியில், 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மண்பானை மூடி மற்றும் கருப்பு நிறத்தாலான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

101 views

"ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" - சுகாதாரத்துறை வட்டாரம் தகவல்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.