பேரறிவாளன் விடுதலை விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பதிவு : ஏப்ரல் 05, 2021, 05:48 PM
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த கடிதத்தின் நகலை பெற்றுத்தரக்கோரி அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்துள்ள மனுவில்,  பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எம்.டி.எம்.ஏ விசாரணை முடியும் வரையில் முடிவெடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் ஆளுநர்,  
 உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தண்டனையை நிறுத்த கோரிய வழக்கில்  விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை, ஜனாதிபதிக்குதான் அதிகாரம் உள்ளது எனக் கூறியுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு மாறுப்பட்ட தகவல்களை ஆளுநர் வழங்கியிருக்கும் நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அவர் அனுப்பிய கடித நகலை தனக்கு பெற்று தர வேண்டும் என அற்புதம்மாள் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.மேலும் பேரறிவாளன் தன்னுடைய தண்டனையை நிறுத்தி கோரிய வழக்குடன் இணைத்து, அற்புதம்மாள் தொடர்ந்த இவ்வழக்கு விசாரணை தொடரும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6598 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1199 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

267 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

76 views

பிற செய்திகள்

தொழிற்சாலை இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர், பொறியாளர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 15அடி உயரமுள்ள இரும்பு கேட் விழுந்து, ரயில்வே காவலர், பொறியாளர் எனஇருவர் உயிரிழந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

243 views

மதுரையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; சீராக ஆக்சிஜன் விநியோகம் என விளக்கம்

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், நோயாளிகளுக்கு சீராக ஆக்சிஜன் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 views

கி.ரா.வுக்கு கோவில்பட்டியில் சிலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

28 views

புதிய அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ளவர்கள்; கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும் - மு.க. ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் புதிதாக அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

120 views

தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்து உற்பத்தி; ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள நிறுவனங்களிடம் வரும் 31ஆம் தேதிக்குள் விருப்ப கருத்து

ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

46 views

ராமநதி, ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம்; யாருக்கும் நில இழப்பீடு வழங்கப்படவில்ல

ராமநதி மற்றும் ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு இதுவரை யாருக்கும் நில இழப்பீடு வழங்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.