வாக்காளர்களுக்கு அனுமதியின்றி எஸ்.எம்.எஸ்? பா.ஜ.க.வுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்தது எப்படி என புதுச்சேரி பா.ஜ.கவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
வாக்காளர்களுக்கு அனுமதியின்றி எஸ்.எம்.எஸ்? பா.ஜ.க.வுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
x
வாக்காளர்களுக்கு அனுமதியின்றி எஸ்.எம்.எஸ்? பா.ஜ.க.வுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்தது எப்படி என புதுச்சேரி பா.ஜ.கவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஆதார் ஆணையத்தில் இருந்து மொபைல் எண்களைப் பெற்று  எஸ்.எம்.எஸ் தகவல் மூலம் புதுவை பாஜக பிரசாரம் மேற்கொள்வதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது,.இந்த மனு மீதான விசாரணையின் போது, ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை  என ஆதார் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது,.கட்சியினர் மூலம்  சேகரிக்கப்பட்ட மொபைல் எண்களை ஏஜென்சிகளுக்கு  அளித்து அதன் மூலம் பிரசாரம் செய்ததாக பாஜக சார்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது,.இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்று வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.மேலும், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியது எப்படி என புதுவை பா.ஜ.வுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்






Next Story

மேலும் செய்திகள்