பாஜக, அதிமுக - பெண்களுக்கு பாதுகாப்பு - வானதி சீனிவாசன்

தமிழக மண்ணில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புகார் தெரிவித்துள்ளார்.
பாஜக, அதிமுக - பெண்களுக்கு பாதுகாப்பு - வானதி சீனிவாசன்
x
பாஜக, அதிமுக - பெண்களுக்கு பாதுகாப்பு - வானதி சீனிவாசன்

தமிழக மண்ணில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புகார் தெரிவித்துள்ளார்.கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவை  புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். பின்னர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய யோகி ஆதித்யநாத், கோவை மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என தமிழில் பேசி உரையை துவங்கினார். தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவை மண்ணில் இருந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.பெண்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்ற மண் தமிழகம் என தெரிவித்த அவர், பெண்களுக்கு அதிமுக, பா.ஜ.க அரசுகளால் மட்டுமே பாதுகாப்பு கொடுக்க இயலும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்