"தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையிலிருந்து வரும் காற்று, தரை காற்றும் வலுவாக இருக்கிறது.  இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்துவரும் 4 முதல் 5 நாட்கள் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 20 மாவட்டங்களில் இயல்பைவிட 2 அல்லது 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் எனக் கூறியுள்ளது.  மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் எனவும் பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12 மணி  முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது, ஊர்வலம் செல்வதை   தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்