வாசுதேவநல்லூர் தொகுதி : பொது தொகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்கு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

இலவசங்களை வழங்கும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
x
வாசுதேவநல்லூரை பொது தொகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, அரசியல் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளை முறைப்படுத்த மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா எனக் கேள்வி எழுப்பினர். தேவையற்ற, காரணமில்லாத தேர்தல் வாக்குறுதிகள் வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையம் ஏன் அறிவுறுத்த கூடாது? எனக் கேட்ட நீதிபதிகள், மக்களை சோம்பேறியாக்கும் வகையில் இலவசங்களை வழங்கும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக் கூடாது என வினவினர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ஓட்டுகளை விற்கும் மக்கள், எப்படி நல்ல அரசியல் தலைவர்களை எதிர்பார்க்க முடியும் என்றனர். 

Next Story

மேலும் செய்திகள்