ஏப்.1முதல் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனோ தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஏப்.1முதல் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
x
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. கேரளா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மினி கிளினிக்களில் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,217 மையங்களில் கொரோனோ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புதிய அறிவிப்பை அடுத்து தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 5,117 ஆக உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்ட 1900 மினி கிளினிக்குகள் உட்பட 5117 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்