தமிழகத்தில் பாஜக தலைவர்கள் பிரசாரம் - சுற்றுப்பயண முழு விவரங்கள் வெளியீடு

தமிழக சட்டபேரவை தேர்தலுக்காக பிரசாரம் செய்யும்,பாஜக தேசிய தலைவர்களின் சுற்றுப்பயண விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் பாஜக தலைவர்கள் பிரசாரம் - சுற்றுப்பயண முழு விவரங்கள் வெளியீடு
x
தமிழக சட்டபேரவை தேர்தலுக்காக பிரசாரம் செய்யும்,பாஜக தேசிய தலைவர்களின் சுற்றுப்பயண விவரங்கள் வெளியாகி உள்ளன. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, 26ஆம் தேதி ஆயிரம்விளக்கு தொகுதியிலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்னையிலும் பிரசாரம் செய்ய உள்ளனர். 27ஆம் தேதி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவை, சென்னை, விளவங்கோடு தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
பிரதமர் மோடி30 ஆம் தேதி தாராபுரம், 2ஆம் தேதி மதுரை, நாகர்கோவில் தொகுதியிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்ரல்1ஆம் தேதி அரவங்குறிச்சியிலும், 3ஆம் தேதி திருநெல்வேலி ,  ராமநாதபுரம், ஆயிரம்விளக்கு தொகுதியிலும் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்