தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை செயலாளர் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
x
வரும் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக, சொந்த ஊர்களுக்கு செல்ல இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஏப்ரல் 1 முதல் 5ஆம் தேதி வரை சென்னையிலிருந்து 3 ஆயிரத்து 90 சிறப்பு பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் என்றும், கோவை,  திருப்பூர், சேலம் , பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து, பிற நகரங்களுக்கு 2 ஆயிரத்து 644  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் முடிந்த பிறகு, ஏப்ரல் 6 மற்றும் 7ஆம் தேதிகளில், மக்கள் திரும்பி வருவதற்கு ஏதுவாக 2 ஆயிரத்து 525 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் 3ஆம் தேதி வரை அனைத்து பேருந்துகளும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், 4, 5 ஆகிய தேதிகளில் மாதவரம், கே.கே.நகர் , தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்