எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வேட்புமனு

ஒசூர் தொகுதியில் போட்டியிட எம்.ஜி.ஆர்.போல் வேடமிட்ட தந்தையுடன் சென்று பெண் சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.
எம்.ஜி.ஆர். போல் வேடமிட்டு வேட்புமனு
x
ஒசூர் தொகுதியில் போட்டியிட எம்.ஜி.ஆர்.போல் வேடமிட்ட தந்தையுடன் சென்று பெண் சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான எலுவப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 61 வயது சின்னையா, அச்சு அசலாக எம்.ஜி.ஆர் போன்று வேடமிட்டிருந்தார். இதேபோல், பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதால், எம்.ஜி.ஆர்.சின்னையா என பெயர்பெற்றுள்ளார். பலமுறை கோரியும் கட்சித் தரப்பில் வாய்ப்பு தராததால், தனது மகளான கீதாவை சுயேட்சையாக மனு செய்ய வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் போல், கை அசைத்தும், நடனமாடியதும் அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்