மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை... 'நீட்' தேர்வுக்கு பதிலாக 'சீட்' தேர்வு

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையில், மருத்துவ படிப்பிற்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் சீட் தேர்வு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை...  நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு
x
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையில், மருத்துவ படிப்பிற்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் சீட் தேர்வு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் உயர்கல்வி உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்வியாக மாற்றப்படும் என்றும் உலகத்தோடு போட்டிபோடும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் எம்பிபிஎஸ்  படிப்பிற்கு சீட் (SEET) தேர்வு கொண்டு வரப்படும்  என்றும் அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவ கல்வி வழங்கப்படும் என்றும்  உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.அரசு பள்ளிக்கல்வி உயர் தரத்தில் மேம்பாடு, அடிப்படை கல்வி சீர்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம் மற்றும் படிப்பு சுமை குறைக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுதனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராமப்புற சுய சார்பு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் மதிப்பு கூட்டுதல் ஸ்மார்ட் கிராம உருவாக்கத்திற்கு அப்துல்கலாம் புரா திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்  
கடன் இல்லாத தமிழகம், வரி குறைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு நிகரான வருமானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்