சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் - வலிகள் நிறைந்த கொண்டாட்டம்

மார்ச் 8 ஆன இன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் தினம் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் - வலிகள் நிறைந்த கொண்டாட்டம்
x
மார்ச் 8 ஆன இன்று சர்வதேச மகளிர் தினம்  உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் தினம் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

"தன் கூண்டின் விட்டத்தையே வானம் என்று வாதாடும் கூண்டுக் கிளிகள்" என்ற மறைந்த கவிஞர் அப்துல் ரகுமானின் வரிகளைப்போல, பெண்களுக்கு அதிகபட்சமாகத் தெரிந்த வெளி உலகம் வீட்டு வாசல் என்ற நிலை இருந்தது. 

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று 18ஆம் நூற்றாண்டில் வீட்டிற்குள்ளேயே பெண்களைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்களின் பிற்போக்குத்தனம் தலைவிரித்தாடியது... 

1850ஆம் ஆண்டுக்குப் பிறகு தடைகளை தகர்த்த பெண்கள் மெல்ல மெல்ல தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என அனைத்து துறைகளிலும் கால் பதிக்கத் தொடங்கினர்...

மாட்டைப் போல் உழைத்தாலும், கொடுக்கும் ஊதியத்தில் பாகுபாடு காட்டும் நிலையில் இருந்ததால், வெகுண்டெழுந்த பெண் தொழிலாளர்கள், 1857ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி அமெரிக்கா முழுவதும் மாபெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்...

அரசும், தொழிற்சாலை உரிமையாளர்களும் சேர்ந்து பெண்களின் போராட்டத்தை ஒடுக்கினாலும், 1910ஆம் ஆண்டு, டென்மார்க் கோபன்ஹேகன் நகரில் மாபெரும் உரிமை மாநாட்டை நடத்திக் காண்பித்தனர், பெண்கள்...

அந்த மாநாட்டில் கலந்து கொண்ட புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின் மார்ச் 8ஆம் தேதியை உலக மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று முன்வைத்த தீர்மானம் நிறைவேறாமல் போனாலும் மகளிர் தினத்துக்கான முதல் விதையை அவர் வித்திட்டார்...

Next Story

மேலும் செய்திகள்