பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
x
ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் கூட்டாக வெளியிட்டனர். அதில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என கூறப்பட்டுள்ளது. வங்கிகளில் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச மருத்துவமும்  இலவச மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என்றும், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை சார்ந்த 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்