திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை

வரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
x
தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணலில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருவதால், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தியுள்ள திமுக, ஒருபக்கம் விருப்பமனு கொடுத்த தொண்டர்களிடம் நேர்காணலையும் நடத்தி வருகிறது. இதனையடுத்து, இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அதில்,வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வரும் 10-ம் தேதி திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்