அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல்

அதிமுக ஆட்சிமன்றக் குழுகூட்டம் முடிந்ததும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று நேர்க்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கான வெற்றிவாய்ப்பு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் தொடங்கியது. இதில், ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமியுடன், அவை தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளார் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், தமிழ்மகன் உசேன், பா. வளர்மதி, ஜஸ்டின் ராஜ் மற்றும் வேணுகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தை அடுத்து அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்