முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை
x
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க கண்காணிப்பு நிபுணர் குழு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த  கண்காணிப்பு நிபுணர்குழுவால் உருவாக்கப்பட்ட அணை பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்கக்கோரி கேரளாவை சேர்ந்த ஜோசப் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. 

இந்த விவகாரத்தில், மத்திய நீர் வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பாத்திரத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளது. 

துணைக்குழு அமைத்தது சட்ட விரோதம் என தெரிவித்திருப்பதையும், கண்காணிப்பு குழு தனது அதிகாரத்தை துணைக்குழுவுக்கு அளித்திருப்பதாக கூறுவதும் ஏற்றுகொள்ள முடியாது.  கண்காணிப்பு குழு உச்சநீதிமன்ற உத்தரவுபடியே அமைக்கப்பட்டுள்ளது. 

 பருவ மழைக்கு முன்னரும், பருவ மழையின்போதும் அணையின் பாதுகாப்பை கண்காணித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவே துணை குழு அமைக்கப்பட்டுள்ளது

இதுபோன்ற சூழலில் துணை குழுவை கலைக்க கோரி ஜோசப் தாக்கல் செய்துள்ள ரிட் மனு சட்ட ரீதியாக எந்த முகாந்திரத்தையும் கொண்டிருக்கவில்லை .

மேலும் இந்த மனு பொய்யான காரணங்களை கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.  இவ்வாறு மத்திய நீர்வள ஆணையம் பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்