நிறுவனத்தை கண்டித்து போராட்டம் - வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய கிராமத்தினர்

நாகை பவர் பிளாண்ட் நிறுவனத்தை கண்டித்து ஒக்கூர் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒக்கூர் கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நாகை பவர் பிளாண்ட் நிறுவனம் அமைக்கப்பட்டது.
நிறுவனத்தை கண்டித்து போராட்டம் - வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய கிராமத்தினர்
x
நாகை பவர் பிளாண்ட் நிறுவனத்தை கண்டித்து ஒக்கூர் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒக்கூர் கிராமத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நாகை பவர் பிளாண்ட் நிறுவனம் அமைக்கப்பட்டது. அப்போது, வாழ ஒக்கூர், நரிமணம், முட்டம் உள்ளிட்ட கிராமங்களில் 80 சதவீத விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு ஈடாக, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி மொழி அளிக்கப்பட்டது. ஆனால், 
பல ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் 100 - க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடிகளை கட்டி தங்களது எதிர்ப்பை, கிராம மக்கள் பதிவு செய்துள்ளனர். இளைஞர்களுக்கு நிரந்தர வேலை, கிராமத்தை மேம்படுத்துதல், வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறத்தப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்