வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம் - தற்காலிக சட்டத்தை எதிர்த்து வழக்கு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தற்காலிக சட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம் - தற்காலிக சட்டத்தை எதிர்த்து வழக்கு
x
தென் நாடு மக்கள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல், எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது என மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார். எம்.பி.சி பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்றும், இதனால், 22 சாதிப்பிரிவினர் பாதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும், தற்காலிக சட்டத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாதென தென் நாடு மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்