யார் யார் தபால் வாக்கு அளிக்கலாம்?

வாக்குப்பதிவு அன்று மேலும் பலருக்கு அத்தியாவசிய சேவையின் கீழ் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
x
வாக்குப்பதிவு அன்று மேலும் பலருக்கு அத்தியாவசிய சேவையின் கீழ் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அரசுடன் இந்திய தேர்தல் ஆணையம் கலந்து பேசி, மேலும் சில நபர்களை அத்தியாவசிய சேவையின் கீழ் வரும் நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, ரெயிலை இயக்கும் லோகோ பைலட் , உதவி பைலட், 'மோட்டார் மென்', கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள், ஏ.சி. பெட்டி உதவியாளர்கள், ரெயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு அன்று இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஊடகத்தினர், விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்தில் உள்ள நபர்கள் ஆகியோரை நபர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது.

சட்டமன்ற தேர்தலின் போது பணி நிமித்தம் காரணமாக வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க முடியாதபட்சத்தில் இவர்கள் தேர்தல் நடத்தை விதிகளின்படி தபால் வாக்குகளை அளிக்கலாம் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அல்லது அமைப்புகள், இதற்கான தொடர்பு அதிகாரிகளை நியமித்து, தபால் வாக்குச்சீட்டு வசதிகளை வகுத்தளிக்க வேண்டும். இதன் மூலம் இவர்கள் தமிழக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, வாக்குப்பதிவு அன்று பணியில் இருப்பவர்களாக சான்றளிக்கப்பட்டு, தபால் வாக்களிக்க தகுதியுள்ள நபராக கருதப்படுவார். அந்த வகையில் வாக்குச்சாவடிகளில் ஆஜராக முடியாத அவர்கள், தபால் மூலம் வாக்களிக்க விரும்பினால் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் 12-டி விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அதை தொடர்பு அதிகாரி சரிபார்ப்பார். 


Next Story

மேலும் செய்திகள்