வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு
பதிவு : மார்ச் 02, 2021, 07:41 AM
வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.
வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் நாளான 6ஆம் தேதி காலை 10.35 மணிக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி,  நெல்லை, இராமநாதபுரம் தேனி ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. அதே நாள் மதியம் 02.00 மணிக்கு கரூர்,  புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை,  மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான 7ஆம் தேதி காலை 9 மணிக்கு, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும், மதியம் 2 மணிக்கு தஞ்சை, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. மூன்றாம் மற்றும் கடைசி நாளான 8ஆம் தேதி,   காலை 9 மணிக்கு மதுரை, திண்டுக்கல், தருமபுரி,  அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்திற்கும், மதியம் 2 மணிக்கு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. மேற்கண்ட மாவட்டங்களில் விருப்ப மனு வழங்கிய நூற்றுக்கணக்கானவர்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெற உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

49 views

பிற செய்திகள்

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

13 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

19 views

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13 views

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

45 views

கொரோனா பரவல் அதிகரிப்பு : கொடிசியாவில் சிறப்பு சிகிச்சை மையங்கள் - பெண்களுக்கு 80 படுக்கை வசதியுடன் தனி வார்டு

கோவையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக சிறப்பு சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

13 views

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவு குறைப்பு : "ஒட்டுமொத்த தேவையில் 20% மட்டுமே ஒதுக்கீடு" - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி

தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை 20 சதவீதமாக குறைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.