கண்டெய்னர் லாரியில் போதைப்பொருள் கடத்தல் - மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல்

புதுச்சேரியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..
x


புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பாரதி வீதி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த லாரியை வணிக வரித்துறையினர் சோதனையிட்டனர். அப்போது அதன் ஓட்டுநர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்குவந்த ஒதியன்சாலை போலீசார், கண்டெய்னர் லாரியில் உள்ளே ஏறி சோதனை செய்தனர். அதில் வீட்டு உபயோக பொருட்களான டி.வி., மேஜை, சேர் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன. மேற்கொண்டு சோதனையிட்ட போலீசார் அவற்றிற்கு நடுவே மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் இருந்ததை கண்டனர். அவற்றின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, லாரியின் ஓட்டுநரை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்