வாங்கவும் ஆள் இல்லை, விற்கவும் வழி இல்லை - நலிவடைந்து வரும் கல்யாண பெட்டி தொழில்

வாங்கவும் ஆள் இல்லாமல், விற்கவும் வழி இல்லாமல் நலிவடைந்து வரும் கல்யாண பெட்டி தொழில் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
வாங்கவும் ஆள் இல்லை, விற்கவும் வழி இல்லை - நலிவடைந்து வரும் கல்யாண பெட்டி தொழில்
x
வாங்கவும் ஆள் இல்லாமல், விற்கவும் வழி இல்லாமல் நலிவடைந்து வரும் கல்யாண பெட்டி தொழில் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

நாளுக்கு நாள் மாறி வரும் நாகரிகத்தில் தொன்மையான சில கலாச்சார பழக்க வழக்கங்கள் மறைந்து வருவதை பலரும் மறக்கிறோம். 

அந்த வகையில், ஒரு காலத்தில் கல்யாண சீர்வரிசையில் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த கல்யாண பெட்டி, இன்று தவிர்க்கப்படும் பொருளாக மாறிவிட்டது. 

இன்று காலத்திற்கு ஏற்றாற்போல் எவர் சில்வர் பத்திரங்களில் பூ, பழம் முதல் வகை வாரியாக சீர்வரிசைகள் இடம்பெறுகின்றன. 

ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கல்யாணம் என்றால் பாரம்பரிய முறைப்படி, சீர்வரிசைகளுடன் கல்யாண பெட்டியும் இடம்பெற்றிருக்கும். 

இன்றும் இந்த கல்யாண பெட்டியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள். 

சிறு தொழிலாக பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவர்கள், பெட்டியை வாங்க ஆள் இல்லாததால், விற்கவும் வழியில்லாமல் தவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்