வன்னியர்களுக்கு10.5 % உள்ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு10.5 % உள்ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
x
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதே போல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சீர்மரபினருக்கு 7 சதவீதமும் இதர பிரிவினருக்கு 2.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மசோதாவை அறிமுகம் செய்து வைத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி , ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அமைக்கப்பட்ட நீதிபதி ஜனார்த்தனன் தலைமையிலான ஆணையம் அரசுக்கு அளித்த பரிந்துரையின் படி இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இருப்பினும் இது தற்காலிகமான நடவடிக்கை தான் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இன்னும் 6 மாத காலத்திற்குள் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் முடிந்தவுடன் இந்த இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என்றும் கூறினார். இதையடுத்து இந்த சட்ட மசோதா பேரவையில் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு  நிறைவேற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்