ரூ.12,400 மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல்

நெய்வேலியில் 2 அனல் மின் நிலையங்கள், மதுரை, திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ரூ.12,400 மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல்
x
நெய்வேலியில் 2 அனல் மின் நிலையங்கள், மதுரை, திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 


மதுரை, திருப்பூர் ஆகிய இடங்களில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4 ஆயிரத்து 144 அரசுஅடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இத்திட்டத்தின் மதிப்பு ரூபாய் 330 கோடி ரூபாய் ஆகும்.  தூத்துக்குடி வஉசிதம்பரனார் துறைமுகத்தில் ரயில் மேம்பாலம், 8 வழி கொண்ட கோரம்பள்ளம் மேம்பாலம் மற்றும்
துறைமுகத்தில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

கீழ் பவானி திட்ட கால்வாய் விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்பு பணிகளுக்காக, 934  கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை, மற்றும் தூத்துக்குடி உட்பட 8 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  

இதற்கான மதிப்பு 107 கோடி ரூபாய் ஆகும்.கோடி ரூபாய், செலவில் அமைக்கப்பட்ட 2 அனல் மின் நிலையங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அத்துடன் மூன்றாயிரம் கோடி ரூபாய் செலவில், அமைக்கப்பட்ட சூரிய மின் சக்தி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 


Next Story

மேலும் செய்திகள்