ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் - ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது உருவ சிலைக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
x
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது உருவ சிலைக்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு வந்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனர். அருகிலிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகிய இருவரும் இணைந்து ஜெயலலிதா பிறந்தநாள் மலரை வெளியிட்டனர். அமைச்சர்கள், அவை தலைவர் மதுசூதனன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில், அ.தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லட்டு, சாக்லேட் உள்ளிட்ட இனிப்புகளை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்