தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர் ஜெயலலிதா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...
தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர் ஜெயலலிதா
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்... 

தமிழக அரசியல் வரலாற்றின் தவிர்க்க முடியாத சக்தியில் ஒருவர். ஜெயலலிதா. சுமார் 35 ஆண்டு கால அரசியல் பயணத்தில் வெற்றியின் சிகரத்தையும்,  தோல்வி தந்த அடி ஆழ பாதாளத்தையும் பார்த்தவர்.

எம்ஜிஆர் முன்னிலையில், 1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த, மறு ஆண்டே கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரானதோடு1984ம் ஆண்டு பேரவை ​தேர்தலில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார், ஜெயலலிதா. 

அதன்பிறகு, அவருக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை  எம்பி பதவியை வழங்கினார்,  எம்ஜிஆர். அங்கு ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் எண் 185. இது மாநிலங்களவை எம்பியாக அண்ணா இருந்தபோது அமர்ந்த இருக்கை. 

எம்ஜிஆர் மறைவுக்கு பின், அதிமுக பிளவுபட்டபோது, ஒரு அணிக்கு தலைமை வகித்த ஜெயலலிதா, 1989ம் ஆண்டு பேரவை தேர்தலில், மிகக் கடுமையான விமர்சனங்களையும் மீறி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரானார். தமிழகத்தின் முதலாவது மற்றும் ஒரே பெண் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா தான்.  

Next Story

மேலும் செய்திகள்