தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பேசிய துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என்றார்.
தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
பொருளாதாரத்தில் எந்த ஒரு பாதகமான தாக்கமும் ஏற்படாமல் இருக்க இந்த பற்றாக்குறையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.15 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி 2021- 22 ஆம் ஆண்டின் நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.94 சதவீதம் அதாவது 84 ஆயிரத்து 202.39 கோடி ரூபாயாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.2021-22-ஆம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 41 ஆயிரத்து 417.30 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.மேலும் மூலதன செலவினம் 14.41 சதவீதம் ஆக உயர்ந்து 43 ஆயிரத்து 170. 61 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2022- ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நிலையில் கடன் சுமை 5 லட்சத்து 70 ஆயிரத்து 180 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.நடப்பு நிதி ஆண்டில் தமிழக அரசின் வருவாய் அளவு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 530 கோடியே 30 லட்சம் ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  வருவாய் செலவுகள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 694 கோடியே 69 லட்சம் ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரவுக்கும் செலவுக்கும் ஆன பற்றாக்குறை 65 ஆயிரத்து 994.06 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்