பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு கொலை - கொலை செய்த குழந்தையின் பாட்டி கைது
பதிவு : பிப்ரவரி 20, 2021, 12:01 PM
உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு, மூச்சு திணறடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது...
பெண் சிசு கொலை.... 90'களுக்கு முன்பு வரை தமிழகத்தில் அதிகமாக அரங்கேறி வந்தது... பின்னர் விழிப்புணர்வு காரணமாகவும், அரசின் பல்வேறு நடவடிக்கைகளாலும், பெண் சிசு கொலை குறைந்தது... ஆனாலும் அவ்வப்போது இந்த கொடூர சம்பவம் ஆங்காங்கே நடைபெற்றே வந்தன... இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.... உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி - சிவப்பிரியா தம்பதிக்கு 5 வயதிலும், 2 வயதிலும் இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர்களுக்கு 3வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது... பிறந்த 7 நாட்கள் ஆன நிலையில், அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர், குழந்தையின் பெற்றோர்... ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்த போது குழந்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது... அதே நேரம், குழந்தையின் உடலில் காயங்கள் இருந்துள்ளன... இதை கண்ட மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில், மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடலை அனுப்பி வைத்துள்ளனர்.  

இதையடுத்து, 5 பேர் கொண்ட மருத்துவ குழு உடற்கூராய்வு செய்த நிலையில், குழந்தைக்கு செயற்கை முறையில் மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டது தெரிய வந்தது... இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை செய்தனர்... இதையடுத்து, குழந்தையின் பாட்டி நாகம்மாளை போலீசார் கைது செய்தனர்... அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை கொன்ற அதிர்ச்சி சம்பவம் உறுதியானது.

தலையணையால், மூச்சை திணறடித்து குழந்தையை கொலை செய்துள்ளார் நாகம்மாள்... குழந்தைக்கு பால் ஆகாரங்கள் கொடுப்பதையும் தொடர்ந்து தவிர்த்து வந்ததாக  அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார், நாகம்மாள்... இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பல்வேறு துறைகளிலும் பெண்கள் அதிவிரைவாக முன்னேறி வரும் இந்த கால கட்டத்தில், உசிலம்பட்டியில் நடைபெற்ற இந்த பெண் சிசு கொலை சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது...

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

468 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

237 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

89 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

87 views

பிற செய்திகள்

சிங்கப்பூர் விமானத்தில் தங்கம் கடத்தல்... ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

19 views

மாற்றங்களை கொண்டு வரும் பெண்களுக்கு வணக்கம் - நிப்பான் பெயிண்ட் குழுமம் அறிக்கை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிப்பான் பெயிண்ட் குழுமம் வாழ்த்து தெரிவித்து உள்ளது.

9 views

இணையத்தில் கலக்கும் 70 வயது பெண் - பேரனுடன் லூட்டி அடிக்கும் ஜாலி பாட்டி

இணையத்தில் இளைஞர்களுக்கு இணையாக கலக்கி கொண்டிருக்கும் டிக்டாக் பாட்டியை பற்றி மகளிர் தின சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்...

77 views

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் - வலிகள் நிறைந்த கொண்டாட்டம்

மார்ச் 8 ஆன இன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் தினம் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

18 views

அப்பவே அப்படி... தமிழகத்தில் நடைபெற்ற பலகட்ட தேர்தல்கள்

தமிழகத்திலும் பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன.

62 views

தபால் வாக்கு அளிக்க விரும்புபவர்கள் 12D விண்ணப்பம் அளிக்க வேண்டும்

தபால் வாக்கு அளிக்க விரும்பும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் அதற்குரிய 12 டி என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.